Sunday, November 28, 2010

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு (28-11-2010)

“ஆண்டவரே இந்த உலகின் அரசர்” என கடந்த வாரம் கொண்டாடி மகிழ்ந்த நம் அனைவரையும், ‘வாருங்கள் வரவிருக்கும் அரசரை ஆராதிப்போம்’ என திரு வருகைக்கால முதல் ஞாயிறு அழைக்கிறது. திருவருகைக்காலம் ஆண்டவரின் இருவேறு வருகையினை நமக்கு மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்துகிறது. நமக்கு தீா்ப்பிட வரும் இறைவனின் நாளில் அவா் முன் மன தைரியத்தோடு எழுந்து நின்று அவரது அரசாட்சிக்கு அழைக்கப்பட்டவா்களாகவும், அவரால் பெயர் சொல்லி அழைக்கப்படுபவா்களாகவும் மாற இன்றைய தினம் அழைப்புவிடுக்கிறது.

பெத்தலகேம் என்னும் சிற்றூரில் மனித உடல் எடுத்து கன்னி மரியன்னையின் மடியில் தவழ உள்ளார் நம் இயேசு.


புனித லுக்காஸ் எழுதிய நற்செய்தி அதிகாரம் 2, இறைவசனம் 10 மற்றும் 11


"இதோ மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பா் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா..."


என்ன என் ஆனந்தம்
என்ன என் ஆனந்தம்
சொல்லலாகாதே...
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னிக்க வந்தாரே...

No comments:

Post a Comment